Homeசெய்திகள்க்ரைம்நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்

நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்

-

- Advertisement -

சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞா்சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலை பகுதியை சேர்ந்தவர் நித்தின் ராஜா ராம் பாபர்(38) அதே பகுதியில் வீட்டில் முதல் தளத்தில் குடியிருந்து கொண்டு இரண்டாவது தளத்தில் BR தங்க மாளிகை என்கிற பெயரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆறு நபர்களில் ஒருவரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த ஆறு வருடங்களாக இந்த கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கடைக்கு வந்த கணேசன் கடையில் இருந்த வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயற்சி செய்தபோது கடையில் கிளர்க் வேலை செய்யும் கணேசன் என்பவர் நகையை ஏன் எடுத்துக் கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு அமைதியாய் இரு இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனை அடுத்து கிளார்க் வேலை செய்யும் கணேசன் நகை கடை உரிமையாளருக்கு போன் செய்து கூறியதன் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது கணேசன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை அடுத்து நகை கடை உரிமையாளர் நித்தின் ராஜா ராம் பாபர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார்.  செம்பியம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொடுத்து புகார் அளித்துள்ளார்.

கடையில் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச்சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

MUST READ