சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோயிலில் தங்க கொலுசு திருடிய பெண்மணியை போலீசார் கைது செய்து ஒரு சவரன் தங்க கொலுசு பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்குமார்(46) கடந்த 13 ம் தேதி அன்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது. அவரது குழந்தையின் காலில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தங்க கொலுசு காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து மகேஷ்குமார் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மயிலாப்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் .அதில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தங்க கொலுசை பெண்மணி ஒருவர் திருடிச் செல்வதும் தெரியவந்தது விசாரணையில் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி(59) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து சுமார் 1 சவரன் தங்க கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கலைவாணி விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி…!கார், பித்தளை கலசம் பறிமுதல்!