உத்தரப்பிரதேசம், மதுராவின் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் உள்ள யானை சிற்பத்தின் வழியாக வழிந்த நீரை ‘சரண் அமிர்த’ அதாவது புனித நீர் என நம்பி சொட்டச் சொட்டச் சொட்டச் சொட்ட வழிந்த நீரை பக்தர்கள் வரிசையில் நின்று பருகிய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஏராளமான பக்தர்கள் யானை சிற்பத்தில் வரும் தண்ணீரை பௌருகுவதற்காக தங்கள் கைகளை உயர்த்துவதைக் காணமுடிகிறது. பிறகு அதைக் குடித்துவிட்டு மீதியை தலையில் போட்டுக் கொள்கிறார்கள்.https://x.com/Reporter_Ravii/status/1853376427149910071
அவர்களில் சிலர் காகிதக் கோப்பைகளுடன், கோயிலுக்குள் இருக்கும் தெய்வங்களின் காலடியில் இருந்து நேராக வரும் தண்ணீரை சேகரிப்பதைக் கூட காண முடிந்தது. கோவிலின் பராமரிப்பாளர் ஆஷிஷ் கோஸ்வாமி கூறுகையில், யானை சிலையில் இருந்து நீர் சொட்டுவது சரண் அமிர்தம் என்று மக்கள் வதந்திகளை பரப்பியுள்ளனர்.
இந்த தவறான எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். கருவறையில் பொருத்தப்பட்டுள்ள ஏசியில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. இது ‘சரண் அமிர்தம்’ அல்ல,” என்றார்.
கோஸ்வாமி மேலும் கூறுகையில், “சரண் அமிர்தம்” பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல’’ எனவர் தெரிவித்தார்..