திருச்செந்தூா் அருகே வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து வந்த பிரபல டாக்டா் காலமானாா்.
திருச்செந்தூா் அருகே 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து வந்த பிரபல டாக்டா் பொன்னையா (90) காலமானாா். திருச்செந்தூாில் உள்ள அவரது கிளினிக்கில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இரவு முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
கொரோனா, மழை வெள்ளம் உள்ளிட்ட காலங்களில் இவரது சேவையால் பல்லாயிரக்கணக்கானோா் பயன்பெற்றுள்ளனா். முதலில் 10 ரூபாயில் ஆரம்பித்து, தற்பொழுதும் கூட 50 ரூபாய் தான் வாங்குவாா், காசு இல்லையென்றால் அதனை கூட வாங்கமாட்டாரு என பொது மக்கள் மிகுந்த வருத்துடன் கூறினாா்கள்.
தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…



