spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

-

- Advertisement -

ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம்,  முத்துலட்சுமி தம்பதியரின் 5 வயது மகன் சாய்சரண், மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சோகமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

we-r-hiring

8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன மாணிக்கத்தம்பதிக்கு 5 வயது மகன் சாய்சரண் மற்றும் 2 வயது மகள் உள்ளனர். வழக்கம்போல் நேற்று காலை இருவரும் வேலைக்குச் செல்வதற்காக சாய்சரணை பாட்டியிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அப்போது வீட்டில் இருந்த வாழைப்பழத்தை சாப்பிட முயன்ற போது, அது தவறுதலாக உணவு குழாய் வழியாக செல்லாமல் மூச்சுக் குழாய் வழியில் சிக்கியுள்ளது. இதனால் சாய்சரண் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சாய்சரன் பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுவனை உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும், பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத்திணறலால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுவனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…

MUST READ