திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 35 பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுனர். அதன் பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கர்னாவூர் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து திண்டிவனம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் லேசான காயம் அடைந்த 35 பக்தர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பக்தர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


