spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை

விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை

-

- Advertisement -

விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து விருத்தாச்சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூன்று நபர்கள் பெட்ரோல் பங்கில் வந்து 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு Google Pay – இல் 200 ரூபாய் பணம் போடுகிறேன் மீதி பணம் 150 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ் நீங்கள் Google pay ல் போட்ட பணம் வரவில்லை.

ஆகையால் நீங்கள் போட்ட ஐம்பது ரூபாய் பெட்ரோல் பணம் மட்டும் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த மூன்று வாலிபர்கள் ஜெயராஜுடன் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜெயராஜ் என்பவர் மாற்றுத்திறனாளி என்பதால் அதில் இரண்டு நபர்களை ஜெயராஜ் கடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பெயரில் விருத்தாச்சலம் போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ