- Advertisement -
விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் கிராமத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துகின்றன.

இதற்குமுன்பு, யானைகள் வருவதை கண்டறிய சைரன் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் யானைகள் வரும் திசைகளை கண்டறிந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விவசாய நிலங்களுக்கு வராமல் தடுத்து வந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்த கருவிகளை வனத்துறை அதிகாரிகள் அகற்றியதால் வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்கு வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.