பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி செய்வதற்கான பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை திருப்புவனம் வழியாக வைகை பாய்வதால் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. செப்டம்பரில் தொடங்கும் வட கிழக்கு பருவமழையினை நம்பி விவசாயிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே நெல், நாற்றங்கால் தயார் செய்ய தொடங்கியுள்ளன. இந்நிலையில், சில நாட்களாக பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் நெல் சாகுபடி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பன்றிகளை அந்த அந்த பகுதி விவசாயிகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ள போதும் பன்றிகளின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளதால், அவற்றை பிடிக்க முடியவில்லை என்கின்றனர். பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பன்றி தொல்லை முடிவிற்கு வந்தால் தங்களது சாகுபடியின் பரப்பளவும் மூன்று மடங்கு வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா பதவி பறிப்பு மசோதா… அரசியல் நாடகமா? – செல்வப்பெருந்தகை கேள்வி