Homeசெய்திகள்மாவட்டம்மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு...

மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…

-

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு...ராமநாதபுரம் நாடார்வலசையில் மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகளை சுற்றிலும் கோயில்கள், கல்விக் கூடங்கள், திருமண மஹால் உள்ளன. இந்த மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு வரும் மது பிரியர்களால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியா்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கோாி, தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பு அறிக்கையை பதிவு செய்து ஐகோர்ட் கிளை வழக்கை முடித்து வைத்தது.

ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்…

MUST READ