பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வேன் சாலையை விட்டு இறங்கி முட்புதற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.வேம்பாரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர்-ல் இருந்து வேம்பாருக்கு 10 பள்ளி மாணவர்களை ஏற்ற சென்றபோது ஒத்தவீடு என்னும் இடத்தில் சாலையை விட்டு இறங்கி முட்பதற்குள் புகுந்து சிக்கிக் கொண்டது.
அப்போது அந்த பள்ளி வாகனத்தில் ஒரு மாணவனும் வண்டி ஓட்டுனரும் வேலாயுதபுரம் தினேஷ் (32) ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். ஒத்தவீடு கிராம மக்கள் வண்டியில் உள்ளவர்களை காப்பாற்ற சூழ்ந்து இறக்கிய போது டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வண்டியில் இருந்த ஒரு மாணவனும் காயம் இன்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த போஸ்டர்லயும் எந்த க்ளூவும் இல்ல…. ‘இட்லி கடை’ படத்தின் கதை என்ன?
