spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…

ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…

-

- Advertisement -

ஆம்பூர் கலவர வழக்கில் 191 பேர் மீதும் இன்று திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015 ஆம் ஆண்டு போலீசாரை தாக்கி நடந்த கலவர வழக்கில் 191 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு இன்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஆம்பூரில் 2015 ஆம் ஆண்டு ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்த சமீல் பாஷா என்பவர் டிரைவர் வேலை செய்து வந்தார் அப்போது கம்பெனியில் பள்ளிகொண்டாவை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

we-r-hiring

பின்னர் இருவரும் திருப்பூர் சென்றுள்ளனர் பெண்ணை காணவில்லை என்று பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்த சமீல் பாட்ஷாவை பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். அப்போது அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சமீல் பாஷா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை அறிந்த ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு திருப்பத்தூர் வேலூர் சாலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

போலீசார்  தாக்கியதுனால் தான் சமில் இறந்தார் எனறு அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தினர் ஆம்பூரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் ஈடுபட்டனர். அவர்களை கலைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டகார்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் பெண் காவலர்கள் உட்பட 91 பேர் தாக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 11 அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டது. 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 4 இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 191 பேர் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு இன்று மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.  இதனால் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு சுமார் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் திருப்பத்தூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

MUST READ