Homeசெய்திகள்தலையங்கம்ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

-

- Advertisement -

என்.கே.மூா்த்திரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
 அதனின் அதனின் இலன்”. – குறள்:341

we-r-hiring

உலகத்தின் எல்லாப் பொருளையும் ஒருவர் முற்றிலும் துறந்துவிட முடியாது. ஆனால் எந்தெந்த பொருளில் இருந்து ஒருவர் எவ்வளவு நீங்கி வெளியே வருகிறாரோ அந்தப் பொருளினால் அவருக்கு துன்பம் நிகழாது.

வாழ்க்கை மிகவும் அழகானது, நேர்த்தியானது. அதை வாழும் முறையில் வாழ்ந்தால் மட்டுமே. மனிதன் எதை மனப்பூர்வமாக வாழ்ந்து பார்த்திருக்க வேண்டுமோ, எதை தனக்குள்ளாகவே தெளிவாக உணர்ந்திருக்க வேண்டுமோ அதை பற்றி அறிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னை அறிந்துக்கொள்ளாமல் போனதால், தன்னை நேசிக்க, தன் மீது அன்பு செலுத்த தெரியாமல் போனதால் தான் உலகத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.

அமெரிக்கா – இஸ்ரேல், ஈரான் போாினாலும் ரஷ்யா – உக்ரைன் போாினாலும் உலகமே துயரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் அடிப்படையான காரணம் மனிதனிடம் மனிதத் தன்மை என்று சொல்லக் கூடிய “அன்பு” என்கிற அடிப்படை குணம் இல்லாமல் போனதால் தான்.

ஒருவரிடம் எந்த அளவிற்கு வன்மம், பொறாமை குணம் இருக்கிறதோ அவரிடம் அன்பு இருக்காது. ஆணவச் சிந்தனை அதிகமாக இருக்கும். அவரால் யாருடனும் இணக்கமாக, நட்பாக இருக்க முடியாது. ஆணவம் என்பது ஒரு சுவர்; அது நீ நீதான்; நான் நான்தான் என்று அழுத்தம் திருத்தமாக வேலி அமைந்துவிடும். அதன் பின்னர் வன்முறை குணத்தையும், எதிர்ப்பு உந்துதலையும் வளர்த்துவிடும். அன்பு உருவாகின்ற, கருணை உருவாகின்ற எண்ணத்தை அடியோடு அழித்துவிடும். அதன் பின்னா் ஒருவர் மீது அன்பு காட்டுவதைப் போல் நடிக்க முடியுமே தவிர ஒரு காலத்திலும்  உண்மையான அன்பை கொடுக்க முடியாது.

முல்லாவும், அவருடைய மனைவியும் சிறிய குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீட்டில் இருவர் மட்டுமே வாழமுடியும் என்கிற நிலை. ஒரு நள்ளிரவில் மழை பெய்தது. குடிசையில் ஓரிரு இடங்களில் ஒழுக தொடங்கியது. அப்போது யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறக்கும் படி மனைவியை கேட்டுக் கொண்டார் முல்லா. அதற்கு அவருடைய மனைவி, நாம் உறங்குவதற்கே இடம் போதவில்லை; இந்த நிலையில் இன்னொருவர் வந்தால் எங்கே படுப்பது என்று கேட்டார். அதற்கு முல்லா சிறிதும் தயங்காமல், நாம் இருவரும் எழுந்து உட்கார்ந்தால் இன்னொருவருக்கு இடம் கொடுக்கலாம் என்றார். கதவை திறந்து ஒருவர் வந்ததும் மூவரும் அமர்ந்து கொண்டனர்.

மழை பெய்துக்கொண்டே இருந்தது. மீண்டும் யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறக்கும் படி முல்லா கூறினார். அதற்கு புதிய விருந்தினர், நாம் மூன்று பேர் உட்காருவதற்கே இடம் போதவில்லை. இந்த சூழலில் இன்னொருவர் வந்தால் எப்படி சமாளிப்பது என்று கேட்டார். அதற்கு முல்லா சொன்னார், நாம் மூவரும் எழுந்து நின்று கொண்டால் இன்னொருவருக்கு இடம் கொடுக்கலாம் என்றார். கதவை திறந்தார்கள், நான்கு பேரும் நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் மழை நின்றது, விருந்தினர்கள் வெளியேறினார்கள்.

எனவே இந்த முல்லாவைப் போல் மற்றவா்கள் மீது அன்பை செலுத்துங்கள், கருணையைக் காட்டுங்கள். வன்முறை குணத்தையும், பொறாமை எண்ணத்தையும் அடியோடு நீக்கினால் அந்த இடத்தில் அன்பு மேலோங்கும்.

உங்களிடம் அன்பு இல்லை என்றால், கருணை இல்லை என்றால் உங்கள் மீதே உங்களால் அன்பு செலுத்த முடியாமல் போகும். பிறகு மற்றவர்கள் மீதும், உங்கள் மனைவி பிள்ளைகள் மீதும் எப்படி அன்பு செலுத்த முடியும்?

இந்த நன்னாளில் மற்றவா் மீது அன்பை செலுத்துவோம்.

புத்தாண்டை வரவேற்போம்! புதிய புரட்சியை கட்டமைப்போம்!

MUST READ