spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…

-

- Advertisement -

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் நடப்பு ஆண்டில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான திறனாய்வுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

we-r-hiring

 

அரசு பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி தலா 500 மாணவ மாணவிகள் என மொத்தம் 1000 பேர் இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.பின்னர் அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொகையானது மாணவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திறனாய்வுத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். திறனாய்வுத் தேர்வின் கேள்விகள் தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 வகுப்பின் கணிதம், அறிவியல்,சமூக அறிவியியல் ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்து கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட்  18 ஆம் தேதிக்குள் சமர்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.திறனறிவுத் தேர்வானது செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

MUST READ