Homeசெய்திகள்இந்தியா4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

-

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.

சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது.

குழந்தை 2.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது, 4 கால்கள் இருந்தாலும், 2 கால்கள் மட்டுமே செயல்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது மருத்துவ அறிவியலின் மொழியில் இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும் போது, உடல் இரண்டு இடங்களில் உருவாகிறது. இதனால் இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்களுடன் வளர்ந்திருக்கிறது, ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்தனர். தகுந்த பரிசோதனைக்கு பின் குழந்தையின் செயலற்ற இரு கால்களை அகற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ