spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி

திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி

-

- Advertisement -

திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி அருகே  விபத்து 5 பேர் பலிஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கிக் கொண்டது.

மேலும், இந்த காரில் பயணம் செய்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட இரண்டு பேரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள் என்று காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரியை சோ்ந்தவா்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.  மேலும் இது குறித்து ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!

we-r-hiring

 

MUST READ