spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

-

- Advertisement -

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

எதிர்காலத்தில், பேருந்துகள், புற நகர் இரயில்வே டோல், பார்க்கிங், ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் சிட்டி, சில்லறை விற்பனை கடைகள், உட்பட பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்த இந்த ஒற்றை அட்டையை பயன் படுத்தலாம். https://transit.sbi/swift/customerportal என்ற  வலைதளத்தை பயன்படுத்தி இந்த அட்டையினை ரீசார்ஜ் செய்யலாம்.

சிங்காரச் சென்னை அட்டைகளை, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சிங்காரச் சென்னை அட்டையில் பல முக்கிய அம்சங்கள் உள்ளது. இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து பெருநகரங்களில் பயன்படுத்தலாம். KYC உடன் எளிதான முறையில் பதிவு செய்யலாம். வாடிக்கையாலருக்கு இந்த அட்டை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில், சிங்காரச் சென்னை அட்டை 7 மெட்ரோ இரயில் நிலையங்களில் வழங்கப்படுகிறது, கோயம்பேடு, சென்ட்ரல், ஏர்போர்ட், உயர்நீதிமன்ற, திருமங்களம், கிண்டி, ஆகிய இரயில் நிலையங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி விரைவில் பயணிகள் அனைவரும் ஒரு ஸ்வைப் கார்ட் மூலம் பயணம் செய்யலாம்.

MUST READ