spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்

-

- Advertisement -

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஜனநாயக முறைப்படி மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும். டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு. மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்’ என்றனர்.

we-r-hiring

இதையடுத்து டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற ஆம் ஆத்மி அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றது. துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது. டெல்லியில் துணை நிலை ஆளுநரைவிட முதலமைச்சருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MUST READ