
ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்க அதிகாரம் கிடையாது என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!
ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், ஆனால் ஒரு மசோதாவைக் கிடப்பிலேயே வைத்திருக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பப்படும் போது, ஒப்புதல் அளிக்க மறுப்புத் தெரிவிப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்றும் குறிப்பிட்டனர். மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருப்பது, மாநில அரசின் அதிகாரங்களை முடக்குவது போல் ஆகும் எனவும் தெரிவித்தனர்.
சட்டப்பேரவை 200 ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் தராமல் இருக்கும் அதிகாரங்களை வழங்குகிறது என்றாலும், அந்த சட்ட முடிவின் படி சம்மந்தப்பட்ட மசோதாவை மாநில சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பார்வை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!
சட்டப்பேரவைகளில் சட்டங்களை இயற்றுவதையோ, சட்டங்களில் திருத்தங்கள் செய்வதையோ ஆளுநர்கள் கிடப்பில் வைத்து தடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.