spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு... மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள்...

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

-

- Advertisement -

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்வதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிர்ணயம் செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த மே 13ஆம் தேதி குடியரசு தலைவருக்கான இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143-வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திடம் எழுப்பி இருந்தார். இந்த கேள்விகள் மீது இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

புதுடில்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அனைத்து யூனியன் பிரதேச அரசுகளும் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். அனைத்து தரப்பினரும் ஒரு வாரத்தில் பதிலளித்த பின்னர் அடுத்த வாரம் செவ்வாய கிழமை பட்டியலிட்டு அன்றைய தினம் இந்த வழக்கில் ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்து விசாரணை நடத்தவது தொடர்பான முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக சில விளக்கங்கள் தேவைப்படும் சூழலில் சில சிக்கல்களும் உள்ளது! எனவே இதில் நீதிமன்றத்திற்கு உதவுமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடர்பான கேள்வியை எழுப்ப உள்ளோம் என தெரிவித்தனர். அதற்கு தலைமை நீதிபதி, அனைத்து தரப்பு பதில் மனுக்களும் கிடைத்த பின்னர் வாதம் வைக்கலாம் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த அரசியல் சாசன அமர்வு, அன்றைய தினம் பதில் மனுவில் உள்ள சாராம்சங்களை பொறுத்து ஆகஸ்ட் மாதத்தில் கால நிர்ணயம் செய்து, வழக்கை விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ