அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்படி, மூத்த பத்திரிகையாளர்கள் ரவி நாயர், ஆபிர் தாஸ் குப்தா, அயஸ்காந்த் தாஸ், ஆயுஷ் ஜோஷி ஆகியோர் மீதான கீழமை நீதிமன்றம் விதித்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனங்கள் குறித்த கட்டுரைகள் பல காலமாக பொதுவெளியில் காணப்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கும் முன்பு அவர்களது கருத்தை கீழமை நீதிமன்றம் கேட்காதது தவறு என மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பொதுவெளியில் இருந்து வரும் அதானி நிறுவனங்கள் குறித்த தட்டுரைகளை அகற்றக் கூறியதும் தவறு என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு, பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகுர்தா தொடர்ந்த வழக்குடன் தொடர்புடையதாகும். அத்தீர்ப்பு இன்னும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
பத்திரிகையாளர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், “பத்திரிகையாளர்களுக்கு அவசர அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். 2024 ஜூன் மாதம் முதலே அதானி நிறுவனம் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் பொதுவெளியில் வந்துகொண்டிருக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதானி குறித்த ஒரு கட்டுரை கென்யா அரசு வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், மற்றொரு கட்டுரை சுவிட்சர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகவும் வழக்கறிஞர் விளக்கினார். “கென்யா அரசு, சுவிட்சர்லாந்து நீதிமன்றம் ஆகியவை அறியாமையில் தீர்ப்பளித்துள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் முகவர்களாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான் என விருந்தா குரோவர் வலியுறுத்தினார்.
வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்