spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்

வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்

-

- Advertisement -

வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்” என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் – ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் “வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்” என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 14-ஆம் தேதி மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் – ஜவாஹிருல்லா பேட்டி அறிவித்துள்ளார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

we-r-hiring

இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையும் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த 15ஆம் தேதி வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் 44 திருத்தங்கள் இருந்தன என்றும் ஆனால் மொத்தமாக 115 திருத்தங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்த திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறிய ஜவாஹிருல்லா, அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்ற அவர் இது இடைக்காலத் தீர்ப்பு தான் என்றும் நவம்பர் மாதம் இந்த தீர்ப்பு முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

இந்த இடைக்கால தீர்ப்பில் மத்திய மற்றும் மாநில வக்ஃபு வாரிய உறுப்பினர்களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜவாஹிருல்லா, மத்திய வக்ஃப்பு வாரியத்தில் அதிகபட்சம் நான்கு இஸ்லாமிய அல்லாதவரும் மாநில வக்ஃபு வாரியத்தில் மூன்று இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கலாம் என்று இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது, அரசமைப்புச் சட்டத்தின் 26 வது பிரிவுக்கு எதிரானது என ஜவாஹிருல்லா கூறினார்.

இந்து அல்லாதவர்கள் இந்து அறநிலையத்துறையில் உறுப்பினர்களாக ஆக முடியாததைப் போல் சீக்கிய குருதுவாக்களில் சீக்கியர் அல்லாதோர் நிர்வாக குழுவில் பங்கு பெற முடியாததையும் குறிப்பிட்ட அவர், ஆனால் வக்ஃபு வாரியத்தில் மட்டும் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சொல்வது பாரபட்சமானது என சாடியுள்ளாா்.

ஒருவர் வக்ஃப் செய்வதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்ற திருத்தப்பட்ட விதியை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் யார் என்பது பற்றிய விதிமுறைகளை வரையறை செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மாநில அரசுக்கு விருப்பமான முஸ்லிம்கள் மட்டுமே வக்ஃப் செய்ய இயலும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

பாஜக ஆளக்கூடிய மாநில அரசுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் எடுக்கின்றன என குற்றஞ்சாட்டிய அவர், பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ள தர்கா உள்ளிட்ட நிறுவனங்கள் மன்னர்கள் உள்ளிட்டோர் மத வழிபாட்டுக்காக வழங்கப்பட்டன என்றும் அதற்கான ஆவணங்கள் இல்லத நிலையிலும் அந்த சொத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பு சொல்லியுள்ளதால் பாரம்பரியமான பள்ளிவாசல்கள் உள்ளிட்டவற்றை முஸ்லிம்கள் இழப்பதற்கான ஆபத்தை இந்த இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு பாரபட்சமான ஒன்று என்றும் வக்ஃபு திருத்தச் சட்டத்தில் வக்ஃபு சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டதை பற்றியும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் சொல்லப்படாதது மிகுந்த வருத்தத்திற்குரியது.

வக்ஃபு சொத்துகளை சட்டபூர்வமாக ஆக்கிரமிக்க கொண்டுவரப்பட்டுள்ள இத்தகைய ஷரத்துகளுக்கு  எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்ல, நிறையக் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் “வக்ஃபை காப்போம், அரசியலமைப்பை காப்போம்” என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிய ஜவாஹிருல்லா, இறுதியாக, புது டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 14-ஆம் தேதி மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் எச்சரித்தார்..

இடைக்கால தீர்ப்பில் சில பிரிவுகளை நிறுத்தி வைத்திருந்தாலும் அந்த தீர்ப்பில் சில நல்ல அம்சங்களும் உள்ளதை வரவேற்பதாகவும், அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்தியா முழுவதும் உள்ள எல்லா முதலமைச்சர் களையும் சந்தித்து இந்த தீர்ப்பு குறித்த விரிவான விளக்கங்களை அளிக்க உள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது – அண்ணாமலை பேட்டி

MUST READ