செல்வப்பெருந்தகை இருக்கும் காங்கிரஸ் திமுகவின் எடுபிடி கட்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது. புதிய புதிய மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. காங்கிரஸ் எத்தனை இடத்தில் ஆட்சியில் உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும், இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ”வயிற்றெரிச்சலில் பாஜகவை பார்த்து விமர்சிக்கிறது காங்கிரஸ். அதல பாதாளத்தில் உள்ளது காங்கிரஸ். எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்தித்த செய்தி அதிகாரபூர்வமாக அனைவருக்கும் தெரியும். அவர் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. முகத்தை மறைத்தது போல அந்த காட்சியில் தெரிந்திருக்கலாம். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக கூறியது. சரித்திர உண்மை, அந்த கருத்தை வரவேற்கிறேன். நாங்கள் அதை கூறியிருந்தால் அது வேறு மாதிரி மாறியிருக்கும்.
2016-17 ல் பாஜக செய்தது என்ன என்பதை எடப்பாடி மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடுதான் தமிழகத்தில் பாஜக உள்ளது. சட்டசபையில் அறிவிப்பது அரசின் வார்த்தை. ரூபாய் தாளுக்கு இருக்கும் உண்மைத் தன்மை பேரவை அறிவிப்புக்கும் உண்டு. அரசு பேரவையில், தான் கொடுத்த வாக்கையே காக்க முடியாவிட்டால் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்.

விஜயின் சுற்றுப் பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோசம்தான். ஆனால் கூட்டத்தால் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படக் கூடாது. விஜய்க்கும் அது குறித்த பொறுப்பு உள்ளது. விஜயக்கு அனுமதி கொடுப்பதில் அரசு தனக்கு இருக்க கூடிய பொறுப்பை உணர வேண்டும். ஆனால் சுற்றுப் பயணத்திற்கு அனுமதி பெறவே த.வெ.கவினர் குட்டிக் கரணம் அடிக்கின்றனர். இதை எல்லாம் சமாளித்தால்தான் விஜய் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். கூட்டணி உருவானபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா கூறினார். அமித்ஷா கொடுத்துள்ள வாக்கை நாங்கள் நிறைவேற்றுவோம். மற்ற தலைவர்கள் அவரவர் கருத்துகளை கூறி வருகின்றனர். கூட்டணி எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ அவ்வளவு சந்தோசம், நிறைய தலைவர்கள் இருந்தால் சந்தோசமே. டிடிவியிடம் சில நாள் முன்பு பேசினேன் . ஓரிரு நாளில் நட்பின் அடிப்படையில் தினகரனை சந்திக்க உள்ளேன். அவரிடம் பேசிய பின் கூறுகிறேன்.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பொதுமக்கள் வாக்கு திமுகவிற்கு செல்லாது. தமிழ்நாட்டில் ஒரு இளிச்சவாயன் இருக்கிறான். அது அண்ணாமலை. ஏன் என்றால் மக்கள் வரிப்பணத்தில் எந்த சம்பளமும் பெறாமல் ஆண்டுதோறும் எனது வருமான விவரங்களை வெளியிட்டு செய்கிறேன். சந்தை மதிப்பை விட அதிகமாக விலை கொடுத்து கோவையில் நிலம் வாங்கினேன். விரைவில் இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சொத்து , வருவாய் விவரங்களை வெளியிட்டு வரும் அரசியல்வாதி நான் மட்டுமே. வேண்டும் என்றால் வட்டாட்சியர் மூலம் நான் நிலம் வாங்கியது குறித்து சோதனை நடத்தட்டும் .10 ஆண்டுகளுக்கான வங்கி பரிவர்த்தனை விவரங்களை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டேன். அடுத்தாண்டு எனது வருமான வரி தாக்கல் விவரங்களை வெளியிட உள்ளேன். மூன்றரை கோடி அளவிற்கு கடனாளியாக நான் இருக்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் நான் சம்பளம் வாங்கும் நிலைக்கு வந்த பின் இன்னும் வெளிப்படையாக இருப்பேன். பாஜகவால் மட்டும்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என மக்கள் நம்புகின்றனர். டெங்கு காய்ச்சல் காரணமாக வீட்டில் இருந்த என்னை பி.எல். சந்தோஷ் வந்து பார்த்தால் அதை அதிருப்தி என்கின்றனர். தலைவர் பதவியில் இல்லாததால் வேலைப் பளு குறைவாக உள்ளது. எனவே இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன்.
முழு நேர அரசியல்வாதி என்பதில் இருந்து தற்போது கட்சி அழைத்தால் மட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். பாஜகவின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். டிடிவி தினகரன் வெளியேற நான் காரணமல்ல. தினகரனின் சொந்த நிலைப்பாடே அவர் வெளியேற காரணம். நான் சிலரிடம் அரசியலை தாண்டி நட்போடு இருக்கிறேன். டிடிவி ஓபிஎஸ்வுடனான எனது நட்பு எப்போதும் தொடரும். ஓபிஎஸ்யையும் கண்டிப்பாக சந்திப்பேன். அரசியல், நட்பு என்பது வேறு வேறு. என் வாழ்வில் யார் மீதும் நான் அவதூறு வழக்கு தொடர நினைக்கவில்லை. அப்படி தொடுத்தால் 365 நாளும் நீதிமன்றத்திலேயே நான் இருக்க நேரும். எனது வளர்ச்சி பலரது கண்களை உறுத்துகிறது. எனவே நீங்கள் குறிப்பிட்டவாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என் மீது அவதூறு பரப்புகின்றனர். என்னை திட்டுவோருக்கு ஊடக முக்கியத்துவம் கிடைக்கும் அப்படி செய்கின்றனர். குரைப்போர் குரைக்கட்டும்.
நேற்று நட்டாவுடன், கடந்த வாரம் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசினேன். நேரில்தான் சந்திக்க வேண்டும் என்று இல்லை. எப்போதும் டெல்லியில்தான் இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ஏன் கட்சி நடத்த வேண்டும்? காங்கிரஸ் கட்சி போல வாரவாரம் டெல்லியில் நான் டேரா போட முடியாது” என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளாா்.
“தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்…ஜனநாயகத்தின் மீது தாக்குதல்-செல்வப்பெருந்தகை கண்டனம்


