- Advertisement -
தெலங்கானா மாநிலத்தில் நாளை தொடங்குகிறது 2வது சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடபட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு BRS அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்தம் 98 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த தகவல்களை அந்த அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது கவணிக்கத்தக்கது.