Homeசெய்திகள்இந்தியா"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம் ஏன்?"- ராகுல்காந்தி எம்.பி. கேள்வி!

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம் ஏன்?”- ராகுல்காந்தி எம்.பி. கேள்வி!

-

- Advertisement -

 

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
Photo: Congress

“நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் அஞ்சுகிறார்?” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என பிரதமர் கூறி வந்துள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தம்மை மிகப்பெரும் ஓபிசி என வர்ணித்துக் கொண்டுள்ளார்.

‘உங்கள் ஆதரவிற்கு நன்றி’…..மனம் நெகிழ்ந்த மறக்குமா நெஞ்சம் படக்குழுவினர்!

ஒருவரை சிறியவர், மற்றொருவரை பெரியவர் என கருதும் மனநிலையை மாற்ற வேண்டும்; ஓபிசி, பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களைக் கணக்கில் கொள்ளாமல் சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை வழங்க முடியாது. சாதிவாரியாகக் கணக்கெடுப்பை நடத்த பிரதமர் அச்சம் கொள்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ