Homeசெய்திகள்இந்தியாசிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!

சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!

-

 

சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!
Photo: ANI

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக் போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படாத கட்சிகளுக்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஆளும் பா.ஜ.க.வை 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவைக் காரணமாக, பெங்களூருவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல், ஜூலை 18- ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கிறது பா.ஜ.க. தலைமை. அதற்காக, அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பா.ஜ.க. தலைமை, கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தல் நெருங்க, நெருங்க, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

MUST READ