

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் கோரி வருகிறார்.
வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
டெல்லி மாநிலத்தில் உயரதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய, அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமாறு மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அண்மையில், டெல்லி அரசிற்கு அதிகாரிகள் நியமனம், இடமாற்றத்தில் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதற்கு மாறாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் வாக்களிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சியைப் பறிகொடுத்ததற்கு ஆம் ஆதமியே காரணம் என்று அந்த மாநில தலைவர்கள் நவஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அந்த கட்சியின் ஆதரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டும் கெஜ்ரிவால், ஏற்கனவே பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சிவசேனாவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சி.பி.எம்.யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவுக் கோரியுள்ளார்.
கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 01) மாலை 04.00 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். அவருடன், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் சென்னை வருகிறார்.
வரும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அந்த கூட்டத் தொடரில் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரளுமா? கட்சிக்குள் எழும் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் கட்சியின் தலைமை என்ன செய்யப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.


