spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

-

- Advertisement -

அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரை பிடித்துக்கொண்டு 15கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் அவசரகால பயன்பாட்டுக்காக பொருத்தப்பட்டிருந்த ஸ்டெப்னி ட்யருக்கும் , அருகில் இருந்த பெட்டிக்கும் இடையே ஒருவர் அமர்ந்தபடி தொங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சிரஞ்சீவி மற்றும் நடத்துடரும் கீழே இறங்கி வந்து அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர்.

we-r-hiring

அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரை பிடித்துக்கொண்டு 15கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. போதையில் ஸ்டெப்னி டயர்களுக்கு இடையே அமந்துகொண்ட அவர், சுமார் 15கி.மீ தூரம் அப்படியே பயணம் செய்திருக்கிறார். நல்வாய்ப்பாக பிற வாகன ஓட்டிகள் கவனித்தமையால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, அந்த நபர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

MUST READ