spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

-

- Advertisement -

 

 

we-r-hiring

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016- ன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் .

அதன்படி, UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஆதார் அட்டை புதுப்பிப்புக்காக மக்களை வற்புறுத்தி வருகிறது. பத்து வருடத்திற்கு ஒரு முரை ஆதார் அட்டை ஆவணங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.

கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான  திருமணம் ஜோடி

ஆரம்பத்தில், UIDAI ஆனது இந்த ஆதார் அட்டை ஆவண புதுப்பிப்பு வசதியை 14 மார்ச் 2024 வரை ஆன்லைனில் இலவசமாக வழங்கியது, பின்னர் குடியிருப்பாளர்களின் கோரிக்கையின் படி 14 ஜூன்  2024 வரை நீட்டித்தது. தற்போது ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கு கால அவகாசத்தை செப்டம்பர் 14ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது .

எனவே, ஆதார் அட்டை ஆவணங்களை புதுப்பிக்கும் வசதி 14 செப்டம்பர்  2024 வரை myAadhaar போர்ட்டலில் ஆன்லைனில் இலவசமாக செய்து கொள்ளலாம்.

MUST READ