Homeசெய்திகள்இந்தியாநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிகமுறைச் சந்தித்தவர் யார்? பதவி இழந்தவர்கள் யார்?- விரிவான தகவல்!

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிகமுறைச் சந்தித்தவர் யார்? பதவி இழந்தவர்கள் யார்?- விரிவான தகவல்!

-

 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியா- சீனா போருக்கு பிறகு 1963- ஆம் ஆண்டு அர்ச்சர்யா திருபாலினி உள்ளிட்டோர் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

கடந்த 1962- ஆம் ஆண்டு போரில் இந்தியா பின்னடைவைச் சந்தித்தால், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், ஜவஹர்லால் நேரு தமது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தார்.

அதிக எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லா தீர்மானங்களைச் சந்தித்தவர் என்ற சிறப்பு இந்திரா காந்திக்கு உண்டு. 15 நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டு, அனைத்தையும் முறியடித்தார். இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை முறியடித்தார்.

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரசிம்ம ராவ், மூன்று முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை எதிர்கொண்டு, முறியடித்தார். நம்பிக்கையில்லாத தீர்மானத்தால் பதவியை இழந்தது இரண்டு பிரதமர்கள் மட்டுமே.

கடந்த 1979- ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் மற்றும் 1999- ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை பதவியை இழந்துள்ளனர். காங்கிரஸ் அரசுகளே அதிக எண்ணிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டு முறியடித்துள்ளனர்.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

கடந்த 2018- ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக 330 வாக்குகள் பதிவான நிலையில், ஆதரவாக 130 வாக்குகள் பதிவானது. இதனால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

தற்போது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 28வது முறையாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

MUST READ