Homeசெய்திகள்இந்தியாவிவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

-

 

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!

கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூபாய் 700 ஊதியம் வழங்க வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு முழு கடன் தள்ளுபடி மற்றும் ரூபாய் 10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து, டெல்லியை ஒட்டிய அண்டை மாநில எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், ஹரியானா காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை விவசாயிகள் உடைக்க முயன்றதால் காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!

மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

MUST READ