புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார் துணை ராணுவம் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சீனியர் எஸ்பி கலைவாணன் மேற்கு கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட திருக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவலர்களிடம் எஸ்பி கலைவாணன், “சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பார்கள்.
அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறு. போலீசார் வேட்பாளர்கள் கொடுக்கும் பணம், பொருட்களுக்கு அடிப்பணியக்கூடாது. தவறு நடக்கும் பட்சத்தில் யாருக்கும் பாகுபாடு பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை எங்கும் நடக்காத அளவில் பார்த்துக்கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் யாரையும் மிரட்டாத அளவில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கு யாரையும் அனுமதிக்க கூடாது. வாக்காளர்கள் அவர்கள் உரிமையை சரியாக செய்ய நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினாா்.
இதேபோன்று வில்லியனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், காட்டேரிக்குப்பம், மங்கலம் ஆகிய காவல்நிலையங்களிலும் சீனியர் எஸ்பி ஆய்வு செய்து காவலர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது எஸ்பி சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஜானகிராமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்
