Homeசெய்திகள்இந்தியாஇந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

-

 

இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!
Photo: PMO

நாகப்பட்டினம்- இலங்கை இடையில் பயணியர் கப்பல் சேவையைத் தொடங்க முடிவுச் செய்துள்ளதாக இலங்கை அதிபர் உடனான சந்திப்புக்கு பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் நடந்த சந்திப்பில், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் இணைப்பை வலுப்படுத்த நாகப்பட்டினம்- இலங்கை இடையில் பயணியர் கப்பல் சேவையைத் தொடங்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதேபோல், ‘UPI’ பணப் பரிவர்த்தனைத் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!

அப்போது பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்ததற்கு இந்தியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, இலங்கை அதிபர் சந்தித்துப் பேசினார்.

MUST READ