Homeசெய்திகள்இந்தியாகடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி....காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி….காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

-

 

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி....காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலம், கடப்பா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆந்திரா, பீகார், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்காக தற்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பள்ளம் ராஜு காக்கி நாடா மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தாரிக் அன்வர், பீகார் மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 228 ஆக உள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக அறியப்படும் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

ரேபரேலியில் மக்களவைத் தொகுதியை பிரியங்கா காந்தியை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என்பதால், அது குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி கட்சித் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

MUST READ