Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

-

- Advertisement -

 

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!
Photo: CM Of Karnataka

கர்நாடக அமைச்சரையில் இடம் பெறவுள்ள 24 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’… படப்பிடிப்பு நிறைவு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பட்டேல், எம்.கிருஷ்ணா பைரவ் கவுடா, என்.செல்வராயசாமி, கே.வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈஸ்வர் காண்ட்ரே உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

அமைச்சர்கள் பட்டியலில் ஆறு லிங்காயத் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்களும், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.அதேபோல், பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், பழங்குடியினங்களை இரண்டு பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இஸ்லாமிய மற்றும் ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா அனைத்து சமுதாயங்களுக்கும், பகுதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் பட இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் துருவ் விக்ரம்!?

பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 27) காலை 11.45 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

கடந்த மே 20- ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமாருடன் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 24 பேர் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவையின் பலம் 34 ஆக உயரவுள்ளது.

MUST READ