Homeசெய்திகள்இந்தியாதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

-

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து பல்வேறு விவசாய அமைப்புகள் மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers protest

கர்நாடக மாநிலத்தில் இருந்து கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் வாயிலாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து விவசாய சங்கங்கள் மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டியா விவசாயிகள் புதன்கிழமை காலை முதல் கே.ஆர்.எஸ் அணை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புதன்கிழமை இரவு முழுவதும் அணை முன்பு தொடர்ச்சியாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் நிலைமை குறித்து ஆராயாமல் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போராட்டத்தின் போது கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒருபுறம் அணை முன்பு விவசாய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தர்சண் புட்டன்னய்யா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், புதன்கிழமை இரவு மண்டியா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு விவசாய சங்க உறுப்பினர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு கையில் நெருப்பு பந்தங்களுடன் மனித சங்கிலி அமைப்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் வரை உங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ