spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகொல்கத்தா பெண் மருத்துவர் கொலை... குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிப்பு

-

- Advertisement -

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆக.9ஆம் தேதி பலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறுநாள் சஞ்சய் ராய் என்பரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விசாரணை கொல்கத்தாவில் உள்ள சியல்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

we-r-hiring

விசாரணையின்போது  குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் எனறும் நீதிபதி தெரிவித்தார். அதன்படி இன்று குற்றவாளி சஞ்சய் ராயின் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று சஞ்சய் ராயின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள சஞ்சய் ராயின் தாயார், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

MUST READ