ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அப்போது கர்னூல் என்னுமிடம் அருகே பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதையடுத்து, பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ஆம்னி பேருந்துக்கு அடியில் பைக் சென்றதில் , தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்ததில், உள்ளிருந்த பயணிகள் அலறியடித்து அவசரகால கதவு வழியே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.


இருப்பினும் இந்த தீ விபத்தில் , பேருந்தில் பயணித்த 23 பயணிகள் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விபத்து நடத்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய பேருந்து கொளுந்துவிட்டு எரியும் காட்சிகளும், முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது.
షాకింగ్ విజువల్స్
కర్నూలులో ఘోర అగ్నిప్రమాదం.. 25 మందికిపైగా మృతి
పూర్తిగా మంటల్లో దగ్ధమైన ప్రైవేట్ ట్రావెల్స్ బస్సు
బస్సులో చిక్కుకున్న 25 మందికిపైగా ప్రయాణికులు..బస్సు కింద చిక్కుకున్న మరో ద్విచక్ర వాహనం
కర్నూలు జిల్లా చిన్నటేకూరు వద్ద ప్రధాన రహదారిపై పూర్తిగా మంటల్లో… pic.twitter.com/BPSpWsOQ4t
— Telugu Scribe (@TeluguScribe) October 24, 2025



