Homeசெய்திகள்இந்தியா"எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்": கே.சி.வேணுகோபால் பேட்டி!

“எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்”: கே.சி.வேணுகோபால் பேட்டி!

-

 

"எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்": கே.சி.வேணுகோபால் பேட்டி!
File Photo

ஜூன் 23- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்பு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 15 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிச் செய்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “பீகாரில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பர். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்த கூட்டத்தில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ