வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 இந்த சட்டமானது ,1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ) இருந்த மத ஸ்தலங்களின் கட்டமைப்பு தன்மையை மாற்றுவதைத் தடைசெய்துள்ளது

சட்டம் அவ்வாறு இருக்கும் போது , உத்தர பிரதேசத்தில் உள்ள ஞான வாபி மசூதி உள்ளிட்ட சில மசூதிகள் ஏற்கனவே இருந்த இந்து கோயில்களில் கட்டப்பட்டதாக இந்து தரப்பினர் கூறி மசூதிகளில் ஆய்வு மேற்கொள்ளக் கோருவது அந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறிய செயலாகும் என்று முஸ்லிம் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ ரத்து செய்யக் கோரி சில தரப்பினரும் ,அந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி வேறு சில தரப்பினரும் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுக்கள் 2021ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. வழிபாட்டு தலங்கள் சட்டமானது ஆகஸ்ட் 15, 1947 கட்-ஆஃப் தேதியை நிர்ணயிக்க எந்த நியாயமும் இல்லை என மனுக்கள் தொடரப்பட்டுள்ளன.
இந்து அடையாளத்தின் காலனித்துவ அழிப்பு மற்றும் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் கலாச்சார மேலாதிக்கம் திணிக்கப்பட்டதால் எழுந்துள்ள மோதலைத் தீர்ப்பதற்கும் இச்சட்டத்திற்க்கும் தொடர்பு இல்லை என்றும் மனுக்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் சட்டம் இந்தியாவின் சமூக கட்டமைப்பைப் பாதுகாக்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை வளர்க்க உதவுகிறது என்றும் ஒரு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்க்கு எதிராக வழக்குகள் தொடர்வது , மதத் தலங்கள் தொடர்பான தீர்க்கப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் தொடங்குவதற்கு சமம் என்றும் அத்தரப்பு வாதிடுகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான விசாரணை :
வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் செல்லுபடி தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நான்கு வார காலமும் ,அதன் மீது பிற தரப்பினர் பதிலளிக்க மேலும் நான்கு வார கால அவகாசமும் வழங்கி விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு காணும் வரை வேறு எந்த நீதிமன்றங்களும் ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பாகவும் , மேலும் வேறு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுக்கம் தவறிய ஜெய்ஸ்வால்… வெறுத்துப்போன ரோஹித் ஷர்மா..! அடுத்து நடந்தது என்ன..?