ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் – பிரதமர் மோடி
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று திரண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பெங்களூருவில் இரண்டாம் கட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று திரண்டுள்ளன. குடும்பத்தால் குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கை. ஊழல் வழக்கில் சிக்கியுள்ளபோதும் எதிர்க்கட்சிகள் திமுகவை குற்றமற்ற கட்சியாக பார்க்கின்றன. ஒரு மாநிலத்தில் ஊழல் வழக்கை விசாரித்தால் மற்றொரு மாநிலத்தில் உள்ள ஊழல்வாதி ஆதரவு கூறுகிறார். மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன.
இந்தியாவில் சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது. பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த எதிர்க்கட்சிகளின் சந்திப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் ஜாமீனில் வெளிவருபவர்களை மிகவும் மரியாதையுடன் பார்க்கிறார்கள். மொத்த குடும்பமும். ஜாமீனில் வெளியே இருக்கிறார், அவர்கள் அதிக மரியாதைக்குரியவர்கள்… யாராவது ஒரு சமூகத்தை அவமதித்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால், அவர் மரியாதைக்குரியவர்.” எனக் கூறினார்.
