spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

we-r-hiring

இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புத் துறை தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த இரண்டு பெண் அதிகாரிகளில் ஒருவர் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி. சில தினங்களுக்கு முன்பாக மத்திய பிரதேச மாநில அமைச்சர் கன்வார் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கப்பதிவும் செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மத்தியபிரதேச அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, நாடு ஒரு முக்கியமான பிரச்சினையை சந்தித்து வரும் தருணத்தில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்தை தெரிவிக்கலாமா? அமைச்சர் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிந்து கொண்டதோடு, உயர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் இப்படி பேசுவது சரியா என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். அதற்கு மத்திய பிரதேச அமைச்சர் தரப்பில் ஆஜரான மனதாரர் அமைச்சருக்கு எதிரான வழக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதால், எஃப்.ஐ.ஆர் மீது தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!ஆனால் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், எனவே உயர்நீதிமன்றத்தில் இந்த தகவல்களை தெரிவிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு இன்றைய தினம் மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

அதனை படித்துப் பார்த்த நீதிபதிகள் காவல்துறையின் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக அமைச்சரை காப்பாற்றும் விதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலைக்காதவாறு மோசமான முறையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததோடு, இவ்வழக்கில் ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாக காவல்துறையினர் கூறுகின்ற நிலையில் இது ஒன்றும் கொலை வழக்கல்ல மாறாக அமைச்சர் பேசிய பேச்சின் விவரங்கள் ஏற்கனவே ஆதாரமாக உள்ளது என தெரிவித்தனர்.பின்னர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரங்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு, வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

MUST READ