spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை... குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

அசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

-

- Advertisement -

அசாமில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர், கடந்த வியாழக்கிழமை அன்று டியூஷனுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்மநபர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய தபுஜல் இஸ்லாம் என்ற நபரை நேற்று கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

அசாம்

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் போலீசார் கைதுசெய்த நபரை குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அருகில் இருந்த குளத்தில் குதித்தார். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரத்துக்குப் பின்னர் அந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கைப்பற்றினர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

MUST READ