
நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் விசாரித்தார்.
“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11.00 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். அப்போது, நாடாளுமன்றத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் சென்று அவரின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய ‘வாட்ஸ்- அப்’ செயலி!
அதற்கு தான் நலமுடன் இருப்பதாக பிரதமரிடம் சோனியா காந்தி பதிலளித்ததாகத் தெரிகிறது. பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சோனியா காந்தி விமானத்தில் திரும்பும் போது, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, மத்திய பிரதேசத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வுக் குறித்தும் சோனியா காந்தியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.