Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை - '4ம் கட்ட கட்டுப்பாடுகள்' தொடர உத்தரவு! -...

டெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை – ‘4ம் கட்ட கட்டுப்பாடுகள்’ தொடர உத்தரவு! – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -
kadalkanni

காற்றின் தரம் சீரடைந்தாலும் மறு உத்தரவு வரும் வரை “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! – பள்ளி கல்வியை முழுமையாக இணைய வழியில் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லியில் '4ம் கட்ட கட்டுப்பாடுகள்' தொடர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உலக அளவில் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக தலைநகரம் டெல்லி மாறிவருகிறது. டெல்லியில் காற்றின் தரம் 490ஐ கடந்துள்ளது. சுவாசப் பிரச்சினை மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகளை டெல்லி வாழ் மக்கள் சந்தித்து வரும் நிலையில் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காற்றின் தரம் மோசமான நிலையில் அதிகரிக்க தொடங்கிய போது எடுக்கப்பட்ட காலதாமதமான நடவடிக்கைகள் காற்று மாசுபாட்டிற்கு காரணம் எனவும் காற்றின் தர குறியீடு 400ஐ கடந்த பிறகும், 3ம் கட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த 24 மணி நேரம் காலம் ஏன் எடுத்து கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

டெல்லியில் '4ம் கட்ட கட்டுப்பாடுகள்' தொடர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! மேலும் காற்றின் தரம் தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது! குறிப்பிட்ட தரத்திற்கு மேல் சென்றால் தான் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காத்திருக்கக் கூடாது எனவும், நிலமை மோசம் அடைவதற்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை அதிகாரிகளின் பணி என நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. தொடர்ந்து வழக்கில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், காற்றின் தரம் 450 கீழ் குறைந்தாலும் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தற்போது டெல்லியில் அமலில் உள்ள “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இவைதவிர, டெல்லி என்.சி.ஆர் பகுதியை ஒட்டியுள்ள மற்ற மாநில அரசுகள் 4ம் கட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் , அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி மற்றும் டெல்லி என்.சி.ஆர். பகுதியை ஒட்டியுள்ள மற்ற மாநில அரசுகளும் 12ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளாக உடனடியாக மாற்ற வேண்டும் எனவும், காற்று மாசுபாடு இல்லாத வகையில் மக்களை வாழ வைப்பது மாநிலம் மற்றும் மத்திய அரசின் கடமை என சுட்டிக்காட்டிய நீதிமன்றம் வழக்கை வரும் வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்துள்ளது.

‘அதானிக்காக களமிறங்கியுள்ள மோடி…’காரணங்களை அடுக்கும் ராகுல் காந்தி

MUST READ