
இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 11,074 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட தற்போதைய லாபம் 16.83% ஆக அதிகரித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!
புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் வரும் காலங்களில் தங்கள் வணிகம் மேலும் மேம்படும் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கீர்த்தி வாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலாண்டில் 523 பணியாளர்களை நிகர அளவில் சேர்த்துள்ளதாகவும், இதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 6.15 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் (TCS) நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசுகளில் துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை உருவாக்கியும், மேம்படுத்தியும் வருவதால், இந்தியாவில் நம்பர் ஒன் மென்பொருள் நிறுவனமாக டிசிஎஸ் பெயர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.