spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

-

- Advertisement -

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே வன்முறையை உருவாக்கிய விவகாரத்தில் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மணிப்பூரில் மெய்தீ – குக்கி இன மக்களிடையே வன்முறை ஏற்பட்டது. பின்னர் துணை ராணுவம் தலையிட்டு பல மாதங்களுக்குப் பிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் உரையாடல் பதிவு ஒன்று வெளியானது.

we-r-hiring

அதில், மணிப்பூர் மக்களிடையே வன்முறையை உண்டாக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதற்கான உரையாடல் உள்ளது எனக் கூறி, மனித உரிமைகள் அறக்கட்டளைக்கான குக்கி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இம்மனு மீது கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், ஆடியோ உண்மை தன்மை குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதன் நகலை மனுவுடன் இணைக்குமாறு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜனவரி மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒலிப்பதிவு நாடா வெளியான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இப்போது குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் மாநிலத்தில் அமைதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் தேவை எனவும், இவ்வழக்கின் விசாரணையை மாநில உயர்நீதிமன்றம் கூட தொடரலாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் தடயவியல் துறையினர் சீலிடப்பட்ட கவரில் வழங்கியுள்ள ஆவணங்களின்படி, மணிப்பூர் மாநில அதிகாரிகளிடம் பேசி புதிய வழிமுறைகளை இவ்வழக்கில் பெறுமாறு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு வழக்கின் விசாரணை ஜூலை 21ம் தேதி மீண்டும் நடைபெறும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

நிர்மலாவின் பிரஸ்மீட் உளறல்கள்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நெத்தியடி பதில்!

MUST READ