spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிர்மலாவின் பிரஸ்மீட் உளறல்கள்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நெத்தியடி பதில்!

நிர்மலாவின் பிரஸ்மீட் உளறல்கள்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நெத்தியடி பதில்!

-

- Advertisement -

நாட்டில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

we-r-hiring

திமுக மீதான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, பாலச்சந்திரன் ஐஏஎஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலி கூறியிருப்பதாவது:-ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு உண்மையை பேசவில்லை. பிரதமர் மோடி வந்ததற்கு பின்னர் தான் மாவட்ட ஆட்சியர்களுடன் முதன்முதலில் பேசியதாக சொல்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி ஆட்சியர்களுடன் 5 நாட்கள் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது, பிரதமரிடம் நாங்கள் சொன்னோம், ஆட்சியர்களிடம் இவ்வளவு அதிகாரம் குவிந்து கிடக்க வேண்டாம். நாங்கள் கீழே உள்ளவர்கள் சொல்வதை கேட்டுதான் செயல்படுவோம். அந்த ஆலோசனை சரியானதா என்று எங்களுக்கு தெரியாது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம். எனவே வளர்ச்சியின் இறுதி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுங்கள் என்று சொன்னோம். நாங்கள் அதிகார வர்க்கமாக இருந்து செயல்படுகிறோம் என்று சொன்னோம்.

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

அடுத்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு ஆட்சியரை தேர்வு செய்து மைசூரில் கூட்டம் போட்டார்கள். மேற்குவங்கத்தில் இருந்து நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நாங்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில்தான், உள்ளாட்சிகளுக்கு அதிக வழங்கக்கூடிய 73-வது அரசியல் சட்டத்திருத்தம் வந்தது. இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் பிரதமர் ராஜிவ் காந்தி ஆவார். இன்றைக்கு பிரதமர் மோடியால் செலக்ட்டிவ் ஆகத்தான் பார்க்க முடிகிறது. அது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இதற்கு அடிநாதமாக மாவட்ட ஆட்சியரே நேரம் ஒதுக்கி பிரதமரை சந்தித்தார். அதன் மூலம் நகர்பாலிகா சட்டம் வந்தது என்பதும் முக்கியமானது.

வேங்கை வயல் விவகாரம் குறித்து யாரும் சந்தோஷப்பட முடியாது. ஏறக்குறைய 1200 ஆண்டுகளாக திணிக்கப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு. தமிழ்நாட்டில் ஆண்டான் அடிமை என்கிற ஸ்திரமான கட்டமைப்பில் இருந்து கடந்த 100 ஆண்டுகளாக விடுதலையாவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் உடனடியாக எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்க முடியாது. ராகுல்காந்தி சரியாக சொல்கிறார், இது ஆயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் கருத்தியல் யுத்தம் என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். அந்த கருத்தியல் யுத்தத்தில் முன்னால் நின்று சண்டையிடுபவர்களும் உள்ளனர். பின்னால்  இருந்து தூண்டிவிடுபவர்களும் இருக்கிறார்கள். உ.பி. சாதிக்கொடுமைகள் நடைபெறுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் சாதிக் கொடுமைகள் நடக்கின்றன. அந்த நிகழ்வை உ.பி. முதல்வர் கண்டிக்கிறாரா? சாதிகள் ஒருவர் ஒருவர் சமம் என்று பார்க்கிறார்களா? ஆனால் தமிழ்நாட்டில் நரிக்குறவர் பெண்ணுக்கு அவமரியாதையாக நடத்தினார் என்பதற்காக பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

mkstalin

சாதிய மனநிலை என்பது அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் உள்ளனர். மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடைய 2 பேர் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டிருந்தாலும் காந்தி கொலை வழக்கில் குறிப்பிட்ட நபரை சந்தேகத்தின் பேரில் வழக்கில் சேர்க்க முடியாது என்று சொன்னார்களே, அந்த நபர் குறித்த விவரங்கள் கிடைத்திருக்கும். அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பார். நேருவின் கைகளை மீறியும் அரசு இயந்திரத்தில் உள்ளவர்கள் செயல்களை செய்ய முடியும் என்பதற்கு உதாரணம். அதேபோல்தான் இன்றைக்கு முதலமைச்சர் எவ்வளவு கண்டிப்பாக சொன்னாலும், அதை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லா மட்டத்திலும் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் வந்து சாதியை பற்றி பேச தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று சொல்வது, இதெல்லாம் உங்களுக்கே சற்று அதிகம் நிர்மலா ஜி என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்துகிறது, இதில் திமுகவுக்கு என்ன வெற்றி இருக்கிறது என்று நிர்மல கேட்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று நினைவு இருக்கிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டை பிளவுபடுத்தும் என்று மோடி சொன்னார்.  1911ஆம் ஆண்டிலேயே சாரிவாரி கணக்கெடுப்பு இருந்ததே அதை ஏன் வெளியே கொண்டு வரவில்லை என்று கேட்டபோது, அது எங்களுடைய தவறு. அதை கொண்டுவந்திருக்க வேண்டும் என்று சொன்னார். இன்றைக்கு மோடி சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொன்னது என்னுடைய தவறு என்று சொன்னால், அவர் சிறந்த நிர்வாகியாக இருந்திருப்பார். ஆனால், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் மோடி என்று கோரஸ் பாடுகிறார்கள்.  தமிழ்நாடு அரசு தான் திரும்ப திரும்ப சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள்.

அதிமுக ஆட்சியின் நஷ்டத்தில் இருந்து மீண்டுள்ளது மின்சார துறை – செந்தில் பாலாஜி விளக்கம்

செந்தில்பாலாஜி ஊழல் செய்தார் என்பதற்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை. உச்சநீதிமன்றம் சொல்கிறது, நீங்கள் அமைச்சர் பதவியில் இருந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவீர்கள். அதனால் உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமினை நீட்டிக்க வேண்டுமா? என முடிவு செய்து கொள்ளுங்கள் என்கிறபோது அவர் ஜாமினை நீட்டிக்க பதவியை ராஜினாமா செய்தார். குற்றவாளியாக இருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் விசாரணை நடத்தி இறுதிமுடிவு எடுக்க வேண்டும். வழக்கு இன்றுவரை நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. அதனால்  நிர்மலா சீதாராமன் தவறாக பேசுகிறார். அமைச்சர் பொன்மொடி, தனது வாய்துடுக்கு காரணமாக பதவியை இழந்தார். அதிலும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. ஆனால் காங்கிரசில் உள்ள ஒருவரை ஊழலின் மறு உருவம் என்று சொன்னார்கள். ஆனால் அவர் பாஜகவில் சேர்ந்த உடன் அசாம் முதலமைச்சர் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கு அவர் ஊழல் காணாமல் போய்விட்டது. 70 ஆயிரம் கோடி ஊழல் செய்த அஜித் பவார், இன்றைக்கு நல்லவர் ஆகிவிட்டார். எனவே ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதியே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ