spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதெலங்கானாவில் பேருந்து டயர் வெடித்து விபத்து- இருவர் பலி

தெலங்கானாவில் பேருந்து டயர் வெடித்து விபத்து- இருவர் பலி

-

- Advertisement -

தெலங்கானாவில் பேருந்து டயர் வெடித்து விபத்து- இருவர் பலி

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியதில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Two persons killed in road accident in Nalgonda-Telangana Today

சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டுருந்த தனியார் பேருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இரவு உணவுக்கு பிறகு தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வேமுலப்பள்ளி மண்டலம், அன்னப்பரெட்டிகுடம் அருகே அட்டாங்கி – நர்கெட்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து அப்போது திடிரென பேருந்து ​​முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தடுப்பு சுவரை தாண்டி, வேமுலப்பள்ளியில் இருந்து மிரியாலகுடா நோக்கி சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.

we-r-hiring

Accident

இதனால் பைக்கில் பயணம் செய்த 3 பேரில் ராதேஷ், ஷயாம் ஆகிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் மீது மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்த அருகில் இருந்து விளைநிலங்களுக்குள் சென்றது. பேருந்தில் பயணம் செய்த குழந்தையுடன் 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மிரியாலகுடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பைக்கில் பயணித்தவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ