spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் வெளியீடு!

மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் வெளியீடு!

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்!மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் வெளியீடு!

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து  அடுத்த நாளான ஏப்ரல் 23ம் தேதி பிரதமர் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த நிலையில் இன்று காலை இரண்டாவது முறையாக பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.

we-r-hiring

இதில் மத்திய உள்துறை, பாதுகாப்பு துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடங்களுக்கு பிறகு மத்திய அமைச்சரவை நிறைவு பெற்றுள்ளது. மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பின் போது தெரிவிக்கப்படும் என  மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

MUST READ